வவுனியா, இலுப்பையடி தினச் சந்தை சுற்றுவட்ட வீதியில் இரு மருங்கிலும் மரக்கறி வியாபாரம் மேற்கொள்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடைபாதையில் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டு வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு எதிராக நகரசபையால் அண்மையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அப்பகுதியில் தற்போது பலர் நடைபாதையில் மரக்கறிகளை சுகாதாரத்துக்குச் சீர்கேடான முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
நகரசபையினரால் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோதிலும், தற்போது அவை அனைத்தும் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் மீண்டும் நடைபாதை ஓரங்களில் இருபுறமும் மரக்கறிகளை வைத்து வியாபார நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment