மடுல்சிமை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலவா தெரேசியா தோட்ட முகாமையாளரை வெளியேறுமாறு கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் கடந்த முன்று நாள்களாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தெரேசியா, மோரா, கிலானி ஆகிய முன்று தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆர்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
தேயிலை மலைகள் காடுகளாக்கப்படுகின்றமை, வேலை நாள்களைக் குதைத்தமை உள்ளிட்டவற்றுக்கு முகாமையாளரே காரணம், எனவே அவரை வெளியேற்றி புதிய முகாமையாளரை நியமிக்க வேண்டும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment