அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாய் பெறுமதி வலுவான நிலையை நோக்கி நகர்ந்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.62 ரூபாயாக நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
ஏற்றுமதியாளர்களின் டொலர் பரிமாற்றம், முதலீட்டாளர்களின் முதலீடு காரணமாக கடந்த வாரம் டொலரின் பெறுமதி 2.8 வீதம் அதிகரித்து காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி அடைந்திருந்தது. இந்நிலையில் ரூபாவின் பெறுமதி வளர்ச்சி அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment