தமது நாளாந்த அடிப்படை வேதனத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்குமாறு கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்றைய தினம் அட்டன் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயிரம் இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதோடு, அதில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பாதீட்டில் 50 ரூபாய் கொடுப்பனவை வழங்குவதாக கூறி தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றி வருவதாக ஆயிரம் ரூபாய் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment