பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வலியுறுத்தி பொகவந்தலாவையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொகவந்தலாவ, கொட்டியாகலை, செல்வகந்த, ஜேப்பல்டன் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 700 ரூபா போதுமானது என்று மக்கள் கூறியதாக பொய்யான அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நாங்கள் கோருவது அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ருபாவை பெற்றுத் தர வேண்டும்” என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment