4 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் குற்றம் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பியகம பேரகஸ் சந்தியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கபெற்ற தகவல் ஒன்றுக்கமைய நேற்று மாலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தள்கள் 38ம் மற்றும் ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 300 கைப்பற்றப்பட்டுள்ளது.
மல்வான பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment