கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன நேற்று மாலை மன்னாருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
மன்னாருக்கு சென்ற பிரதி அமைச்சர் மன்னார் மாந்தை உப்புக்கூட்டுஸ்தாபனத்தினை நேரடியாக சென்று பார்வையிட்டார்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீனின் வேண்டுகோளுக்கு அமைவாக அவர் அங்கு சென்றார்.
மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு சென்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன அங்குள்ள நிலமையினை நேரடியாக அவதானித்தார்.
மேலும் உப்புக்கூட்டுஸ்தாபனத்தின் முகாமையாளர் உட்பட அதிகாரிகளை சந்தித்து உரையாடியதோடு, அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment