காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயல் குழு மாநாடு, இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, இடம்பெறவுள்ளது.
இந்த மாநாடு பொஸ்னியா மற்றும் ஹர்சகோவினாயா ஆகிய நாடுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் இலங்கை உட்பட 37 நாடுகளில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட 760 முறைப்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, சுயாதீனமாக இயங்கும் மனித உரிமை வல்லுனர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடவுமுள்ளனர்.
இதைத் தவிர, பல நாடுகளைச் சேர்ந்த அரச அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய மனித ஆர்வல உறுப்பினர்களும் கலந்து கொள்வர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சரஜீவோவில் நடைபெறும் அமர்வின் போது, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளைக் கொண்ட நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளின் பயணம், இனம் காணப்பட்ட முறைப்பாடுகளை அமுல்படுத்துவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment