இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க செய்தி தொடர்பாளர் இந்தியா - பாகிஸ்தானுக்கு அனுப்பி உள்ள தகவலில், இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும். எல்லையில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து ராணுவ நடவடிக்கையை தொடர்ந்தால் அது தற்போதுள்ள நிலைமையை மேலும் மோசமாக்கும். அது இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகரிக்கவே வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோவும், ராணுவ நடவடிக்கை தொடராமல் இருக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜூம், பாக்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஸா முகம்மது குரேஸியும் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதேவேளை பாக்கிஸ்தான் ஜெய்ஸ்சி இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா பாராட்டும், ஆதரவும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை நேற்று இரவு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். பாகிஸ்தான் மண்ணில் ஜெய்ஸ்சி இ முகம்மது பயங்கரவாத முகாம்களை அழித்து, பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதாக மைக்பாம்பியோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் மோதலில் அமெரிக்கா இரட்டைவேடம் போடுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.
#IndiaWar #America #Trump #DonalTrump #PakistanAirForceOurPride #PulwamaAttack #SurgicalStrike2 #IndiaWar #PakistanWar #IndoPakistanWar #IndiaPakistan #ArmyBase #Modi #NarendraModi #IndiaStrikesPakistan #Surgicalstrike #IndianAirForce #IndiaStrikesBack #TamilNewsKing
#IndiaWar #America #Trump #DonalTrump #PakistanAirForceOurPride #PulwamaAttack #SurgicalStrike2 #IndiaWar #PakistanWar #IndoPakistanWar #IndiaPakistan #ArmyBase #Modi #NarendraModi #IndiaStrikesPakistan #Surgicalstrike #IndianAirForce #IndiaStrikesBack #TamilNewsKing
0 comments:
Post a Comment