இந்தியா பாலவாக்கம் கடற்கரையில் ஆமைகளை பாதுகாக்கவும், கடற்கரையை தூய்மையாக வைத்துகொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மணல் சிற்பபோட்டி நடத்தபட்டுள்ளது.
அழிந்து வரும் இனமாக உள்ள ஆலிவ் ரிட்லீ வகை ஆமைகள் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை சென்னை சுற்றியுள்ள கடற்கரையில் இனப்பெருக்கம் செய்வது வழக்கம். இந்நிலையில் பல்வேறு காரணங்களால் அழிந்து வரும் இவற்றை பாதுகாக்கவும், ப்ளாஸ்டிக் போன்ற குப்பைகளால் ஆமைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கபடுவதால் கடற்கரையை தூய்மையாக வைத்து கொள்ள வலியுறுத்தியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சிற்ப போட்டி நடத்தபட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், மணல்சிற்ப கலை மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
குழுவிற்கு 5 பேர் என்ற கணக்கில் 101 குழுவினர் கலந்து கொண்டு ஆமை முட்டையிடுவது, முட்டையிலிருந்து ஆமை வெளிவருவது, ஆமைகளின் வளர்ச்;சி, குஞ்சுகளை பராமரித்தல் போன்ற பலவகையான மணல் சிற்பங்களை செய்து போட்டியிட்டனர். அத்துடன் சிறந்த மணல் சிற்பங்களுக்கு பரிசுகள் வழங்கபட்டுள்ளது.
0 comments:
Post a Comment