வர்த்தக நிலையத்தில் பொருள்கள் திருடியவரைக் கடுமையாக எச்சரித்த யாழ்.நீதிவான் மன்று அவருக்கு 500 ரூபா தண்டம் விதித்து விடுவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள்களைத் திருடினார் என்ற குற்றச் சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவற்றைத் திருடியமை, உடமையில் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் அவர் ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து அவருக்கு 500 ரூபா தண்டம் விதித்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்களில் ஈடுபடக் கூடாது, அவ்வாறு ஈடுபட்டால் விளக்கமறியலில் வைக்கப்படுவீர் என்று எச்சரித்து விடுவித்தார்.
0 comments:
Post a Comment