சட் டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா போகஸ்வெவக் குளத்தில் நீண்ட காலமாக சட்ட விரோதமான முறையில் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
தகவலையடுத்து, தேசிய நீர் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்டப் பொறுப்பதிகாரி நிசாந்தன் யோகநாதன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் மற்றும் மடுகந்தை விசேட அதிரடிப்படையினர் இன்று சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
இதன் போது, சட்டவிரோதமான முறையில் தடை செய்யபட்ட வலைகளை உடமையில் வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஐவரைக் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகள் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் ஜவருக்கும் ஆள் பிணை வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் நீர் உயிரினவளர்ப்பு அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.
0 comments:
Post a Comment