இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதன்படி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் தேசிய சுதந்திர தின நிகழ்வு, இன்று காலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் அலிசாகிர மௌலானா கலந்துகொண்டார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அலுவலகங்களில் தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
0 comments:
Post a Comment