யாழ்ப்பாணம் நாவாந்துறை கலைவாணி விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 07 பேர் பங்கு பற்றும் விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரில் நாவற்குழி அன்னை விளையாட்டுக்கழக அணி வெற்றிவாகை சூடியது.
கழக மைதானத்தில் நேற்று இடம் பெற்ற ஆட்டத்தில் நாவற்குழி அன்னை விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து எல்லாளன் விளையாட்டுக் கழக அணி மோதியது.
12:0 என்ற கோல் கணக்கில் , நாவற்குழி அன்னை விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.
நாவற்குழி அன்னை விளையாட்டுக்கழக அணி சார்பில் எரேமியா 10 கோல்களையும், யோகேஸ். கனோஷன் இருவரும் தலா ஒர் கோலையும் பதிவு செய்தனர்.
0 comments:
Post a Comment