இந்தோனோசியாவின் பப்புவா மாகாணத்தில் கைதி ஒருவரிடம் பொலிசஸார் கொடூரமான முறையில் விசாரணை நடத்தியால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது விசாரணை கைதி செல்போன் திருடியதால், அவரை கைது செய்து கை கால்களை கட்டி அவரது கழுத்தில் மலை பாம்பை சுற்றி வைத்து அவரை அச்சுறுத்தி கைதியிடம் பொலிஸார் கேள்விகளை கேட்;டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதனை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இவ்வாறான விசாரணை அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் சிலர் இதற்கு கண்டணம் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் இது மனித உரிமை மீறல் எனக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு இந்தோனேசிய பொலிஸார் தனது வருத்தத்தைத் தெரிவித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். மேலும் இனவெறியுடன் இந்தத் தண்டனை அளிக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இம்மாதிரியான கொடூரமான முறையில் விசாரணை நடத்துவது முதல் முறையல்ல எனவும் ஏற்கெனவே சில கைதிகளை இது போன்று விசாரணை செய்துள்ளனர் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
0 comments:
Post a Comment