முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவருடைய வாழ் நாளில் ஒருபோதும் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள மாட்டார் என, நெடுஞ்சாலை வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும், ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கத் தயார் என்று கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்த போதே இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்ட தாகவும், அதனால் அவருக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடி வழக்குகள் காணப்படுவதாலும், வெள்ளை வான் கடத்தலின் தந்தை என அவர் வர்ணிக்கப்படுவதாலும், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலையுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாலும், அவருக்கு பெரும்பான்மை மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment