ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் பிலிப்பைன்ஸுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்டால் நினைவுப் பரிசாக ஜனாதிபதியின் உருவப் படம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அந்த ஓவியத்தை வரைந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஓவியரான Ranilo Abayan அண்மையில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்ததுடன், சுற்றுப் பயணத்தை நிறைவுசெய்து தாய் நாட்டுக்கு திரும்பும் வேளையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று அவரை சந்தித்தார்.
ஜனாதிபதி Ranilo Abayan க்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கினார்.
இந்நிகழ்வில் பிலிப்பைன்ஸ் நாட்டுக் கலைஞர்களும் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment