இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் டிம் சைபெர்டின் அதிரடி ஆட்டம் காரணமாக நியூஸிலாந்து அணி 219 ஓட்டங்களை குவித்துள்ளது.
நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது நியூஸிலாந்து அணியுடன் ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 தொடர்களில் விளையாடி வருகின்றது.
இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 4:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்கிடையோயான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று வெலிங்டனில் பிற்பகல் 12.30 க்கு ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா முதலாவதாக துடுப்பெடுத்தாடுமாறு நியூஸிலாந்து அணியை பணித்தார்.
முதலாவதாக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணிக்கு, கொலின் முன்ரோ மற்றும் டிம் சைபெர்ட் அதிரடியான ஆரம்பத்தை கொடுத்து ஆட்டத்தின் விருவிருப்பை அதிகரித்துள்ளனர்.
முன்ரோ மூன்றாவது ஓவரின் கலில் அஹமட்டின் ஓவரை எதிர்கொண்டு இரு 6 ஓட்டங்களை அடுத்தடுத்து விளாசித் தள்ள மறுமுணையில் இளம் வீரர் டிம் சைபெர்ட்டும் பந்துகளை பறக்க விட்டார்.
இதனால் நியூஸிலாந்து அணி 5 ஓவர்களில் 50 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் சைபெர்ட் 24 ஓட்டத்துடனும், முன்ரோ 30 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வர 8.1 ஆவது ஒவரில் சைபெர்ட் 3 ஆறு ஓட்டம், 5 நான்கு ஓட்டம் அடங்களாக அதிரடியாக அரை சதம் விளாசினார்.
இதேவேளை மறுமுணையில் இவருக்கு தோள் கொடுத்தாடிய முன்ரோ 8.2 ஆவது ஓவரில் 20 பந்துகளை எதிர்கொண்டு 2 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்களாக 34 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இவரையடுத்து வில்லியம்சன் களமிறங்கி துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து அணி 10.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 104 ஓட்டங்களை கடந்தது.
இந் நிலையில் 12.4 ஆவது ஓவரில் அதிரடியாக ஆடிய டிம் சைபெர்ட் 43 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 84 ஓட்டத்துடன் கலில் அஹமட்டின் பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து டாரல் மிட்செல் இரண்டாவது விக்கெட்டுக்காக களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க 14 ஆவது ஓவருக்காக பாண்டியா பந்துப்பரிமற்றம் மேற்கொள்ள வில்லியம்சன் அடுத்தடுத்து 2 ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ள அணியின் ஓட்ட எண்ணிக்கை 150 ஐ கடந்தது.
எனினும் 14 ஆவது இறுதிப் பந்தில் டாரல் மிட்செலும் 15.1 ஆவது ஓவரில் வில்லியம்சனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியற, 4 ஆவது விக்கெட்டுக்காக ரோஸ் டெய்லர் மற்றும் கிரோண்ஹோம் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆட ஆரம்பித்தபோதும் கிரோண்ஹோம் 3 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அவரையடுத்து டெய்லரும் 14 பந்துகளை எதிர்கொண்டு 23 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.
இவர்களின் வெளியேற்றத்தையடுத்து மிச்செல் சாண்டர் மற்றும் ஸ்கொட் குகெலெய்ன் அடுத்தடுத்து களமிறங்கி துடுப்பெடுத்தாட நியூஸிலாந்து அணி 18.5 ஆவது ஓவரில் 200 ஓட்டங்களையும், 20 ஓவர்களின் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களை குவித்தது.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் ஹர்த்திக் பாண்டியா 2 விக்கெட்டுக்களையும் கலில் அஹமட், குருனல் பாண்டியா, சஹால், புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
இதன் மூலம் நியூஸிலாந்து அணிக்கு வெற்றியிலக்காக 220 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment