போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த ஒருதொகை கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பூந்தோட்டம், குருமன்காடு,தாண்டிக்குளம், பட்டாணிச்சூர ,மற்றும் நகரப்பகுதிகளிலேயே போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த 88 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன.
மாடுகளின் உரிமையாளர்கள் ஆயிரத்து 600 ரூபாவைச் செலுத்தி தங்களது மாடுகளை அழைத்துச் செல்லுமாறும். தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்குப் பராமரிப்புச் செலவாக 300 ரூபா மேலதிகமாக அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment