கடற்படை தம்மை அச்சுறுத்துவதாக முறைப்பாடு!




தொடர்சியாக இனம் தெரியாதவர்களும் கடற்படையினறும் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும் தொடர்சியாக கடற்படை முகாமுக்கு வெளியில் இருந்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கடற்படையினர் புகைபடம் எடுப்பதாகவும் எனவே தமக்கு பாதுகாப்பு வழங்க கோரி சிலாவத்துறை மக்கள் இன்று (22) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்

தொடர்சியாக இனம் தெரியாதவர்களும் கடற்படையினறும் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும் தொடர்சியாக கடற்படை முகாமுக்கு வெளியில் இருந்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை கடற்படையினர் புகைபடம் எடுப்பதாகவும் எனவே தமக்கு பாதுகாப்பு வழங்க கோரி சிலாவத்துறை மக்கள் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்



மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை மக்களுக்குரிய 36 ஏக்கர் காணிகளில் தற்போது கடற்படை தங்கள் முகாம்களை அமைத்துள்ளது இந்த நிலையில் சுமார் 218 க்கு மேற்பட்ட மக்களின் காணிகள் அவ்வாறு கடற்படை வசமாக காணப்படுவதனால் கடற்படை வேறு இடத்திற்கு முகாமை மாற்றி குறித்த காணியை உரிய மக்களுக்கு வழங்க கோரி கடந்த புதன் கிழமை தொடக்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

இந்த நிலையில் தங்களுடைய போராட்டத்தின் போது இனம் தெரியாதவர்களும் கடற்படையினரும் தொடர்ந்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும் போராட்டத்தில் ஈடுபடும் அனைவரையும் புகைப்படம் எடுப்பதாகவும் கோரி மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஆலோசனையின் பெயரில்
இன்று காலை மன்னார் மனித உரிமை காரியாலயத்தின் உப அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்



தொடர்சியாக எங்களை அச்சுறுத்தும் விதமாக கடற்படை நடந்து கொள்வதால் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தறுமாறும் எவ்வாறான அச்சுறுத்தல் வந்தாலும்  கடற்பாடை  தங்கள் காணிகளை விட்டு வெளியோறூம் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்

இன்றுடம் 3 நாளாக சிலாவத்துறை கடற்படைக்கு முன்பாக மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment