காலிமுகத்திடலில் சுதந்திரதின விழா
இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு காலிமுகத்திடலில் இடம்பெற்றது.
இதில ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரது பாரியார் சகிதம் வருகை தந்தார்.
இதன்போது , ஜனாதிபதியால் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவ மாணவிகளால் தேசிய கீதமும் பாடப்பட்டது.
நிகழ்வில் மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க , அமைச்சர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மதத்தலைவர் மற்றும் வௌிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட விருந்தினர்களின் பங்கேற்புடன் 71வது தேசிய சுதந்தர தின நிகழ்வு தற்போதைய நிலையில் காலிமுகத்திடலில் இடம்பெற்று வருகின்றது.
0 comments:
Post a Comment