நாடு முழுவதும் போதை பொருள் தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் போதை பொருள் தொடர்பிலான விழிப்புணர்வு திட்டங்கள் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை படிப்பை நிறைவு செய்த பின்னரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகப் போதை பொருளைப் பயன்படுத்துபவர்கள் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் பாவனை தொடர்பில் கைது செய்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த வருடம் 13 ஆயிரத்து 765 திட்டத்தில் 10 லட்சத்து 84 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த திட்டத்தின் போது 13 தொடக்கம் 29 வயது வரையிலான வயதுடையவர்களினால் போதை பொருள் பாவனை குறைவாக காணப்பட்டதாக போதை பொருள் தடுப்பு பிரிவு காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இந்த வருடத்திலும் இவ்வாறான வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment