எரிபொருள் நிலையத்தில் கொள்ளை!

மாத்தளை – வரகாமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு உந்துருளியில் வந்த இனந்தெரியாத இரண்டு பேர் அங்கிருந்து பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முழுமையாக முகத்தை மூடிய தலைக்கவசங்களுடன் வந்த குறித்த இருவரும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பணியாளர்களை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி இந்த கொள்ளையை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சுமார் 50 ஆயிரம் அளவில் அவர்கள் கொள்ளையிட்டுள்ளதாக காவல்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.





Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment