தரித்து விடப்பட்டிருந்த டிப்பருடன், சொகுசுப் பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கங்குளம் பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணிகள் சொகுசு பேருந்து, யாழ் நோக்கி பயணிக்கும் திசையில் தரித்து நின்ற கல் ஏற்றிய டிப்பருடன் மோதியது.
விபத்தில் உயிரிழந்தவர் சாரதி உதவியாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment