இந்தியா சென்னை பள்ளிக்கரணை குப்பையில் இருந்து எடுக்கப்பட்ட பெண் உடல் உறுப்புகள் தூத்துக்குடியைச் சேர்ந்த நடிகை சந்தியா என்பது தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது கடந்த 21 திகதி மாலை 3.30 மணியளவில் பள்ளிக்கரணை ரேடியல் சாலையிலுள்ள குப்பை கிடங்கினுள், பிளாஸ்டிக் பையில் சுமார் 35 வயது மதிக்கத் தக்க பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை துண்டாக வெட்டப்பட்ட நிலையில் டிஇருந்ததை அங்கு வேலை செய்யும் நபர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து பள்ளிக்கரணை கிராம நிர்வாக அதிகாரியால் பொலிசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் குடும்ப சண்டையில் கணவனே துண்டு துண்டாக வெட்டி குப்பை தொட்டியில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் பொலிசார் மரண வழக்கு பதிவு செய்ததுடன் கைப்பற்றிய உடல் உறுப்புகள் குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு வந்து மூன்று மருத்துவ உதவிப் பேராசிரியர்கள் கொண்ட குழு இராமலிங்கம், நரேந்திரன், எழில்கோதை தலைமையில் மரபணு சோதனைக்கு திசுக்களை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர.
அத்துடன் உடல் உறுப்புகள் எந்த ஆயுதம் பயன்படுத்தி வெட்டி இருப்பார்கள்
என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் இயந்திரம் மூலமாக செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது
இச் சம்பவம் தொடர்பாக பொலிசாரினால்
மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment