தெல்லிப்பளை கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடோன்றினுள் கடந்த சனிக்கிழமை வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக அதிகாலை வேளை உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள் , வீட்டில் நித்திரையில் இருந்தவர்களை எழுப்பி கத்திமுனையில் வைத்திருந்து வீட்டினை சல்லடை போட்டு தேடி வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்துக்கொண்டனர்.
பின்னர் குடும்ப பெண்ணின் தாலியினை பறிக்க முற்பட்ட போது அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்க அவரின் தலையில் பலமாக கொள்ளையர்கள் தாக்கி தாலி உட்பட 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் நேற்று ஞாயிற்றுகிழமை மாலை கட்டுவான் பகுதியில் ஒருவரும் , தெல்லிப்பளை பகுதியில் ஒருவருமாக , இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யபட்ட இருவரும் 19 வயதுடையவர்கள் எனவும் , அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை மீட்டுள்ளதாகவும், தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment