ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்த ஸ்பைடர் படம் திருப்புமுனையை தரும் என்று எதிர்பார்த்தார் ரகுல்பிரீத்சிங்.
அந்த படம் அவருக்கு அதிர்ச்சித் தோல்வியைத்தான் கொடுத்தது.
இப்படியான நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அடுத்து, மீண்டும் கார்த்தியுடன் தேவ் படத்திலும், சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் தற்போது நடித்துள்ளார் ரகுல்பிரீத்சிங்.
இதில் தேவ் படம் காதலர் தினத்தன்று வெளியாகிறது.
இந்த நிலையில், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகும் தேவ் படம் மிகப்பெரிய வெற்றியடைந்து ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் தனது மார்க்கெட்டை உயர்த்தும் என நம்புகிறார்.
0 comments:
Post a Comment