இந்தியா நாகை மாவட்டம் சீர்காழி அருகே பொலிஸ் முறைப்பாட்டினை விசாரிக்க சென்ற காவலரை தாக்கிய நபரை நடுத்தெருவில் வைத்து பொலிசார் அடிக்கும் காட்சி சமூக வலை தலங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது பட்டவிலாகம் கிரமத்தை சேர்ந்த ஜான்சன் என்பவர் அடிகடி பணம் கேட்டு மிரட்டுவதாக கொள்ளிடம் பொலிஸ் நிலையத்தில் சார்லஸ் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசரிப்பதற்க்காக சென்ற பொலிஸாரை ஜான்சன் கட்டையால் தாக்கி தலைமறைவாகியிருந்தார்.
இது தொடர்பாக விசாரிக்க சென்ற பொலிஸ்; ஆய்வாளர் முனிசேகர் வீட்டில் பதுங்கி இருந்த ஜான்சனை பிடித்து வீட்டின் வாசலில் வைத்து அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன் அதுமட்டுமின்றி பொலிஸ் மீது தவறான குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுவருவதால் பொதுமக்களிடையே பொலிசார் மீது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.
0 comments:
Post a Comment