வட.மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக்குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டதற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என வட.மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
சமகால அரசியல் நிலமைகள் குறித்து சி.வி.கே.சிவஞானம் அவருடைய இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தார். இதன்போதே அவர் இக்கருத்தினை தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படாமல் வவுனியாவில் உள்ள சிங்கள பிரதேசத்தை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு கருத்து கூறியிருக்கிறார். ஆனால் உண்மை அதுவல்ல, சிவசக்தி ஆனந்தன் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் அப்பட்டமான பொய்களை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
2016ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக ஆராயப்பட்டது. பெரும்பான்மை வாக்குகள் ஓமந்தைக்கு கிடைத்ததால் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓமந்தையில் அமைக்கப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் எவ்வாறு வவுனியாவில் சிங்கள பிரதேசத்தை அண்டி அமைக்கப்பட்டது என்பது எமக்கு தெரியாது” என சி.வி.கே.சிவஞானம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment