பொகவந்தலாவை வானகாடு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பத்தினருக்கு வீடுகள் அமைக்க மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் அமைச்சின் ஊடாக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளையும் அமைப்பதற்கான இடத்தினை தோட்ட முகாமையாளருடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞரணி தலைவரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான சிவனேசன், அமைச்சரின் பிரத்தியேக உதவியாளர் கமலதாசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் நிர்மலாதேவி ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
அத்தோடு தற்காலிக குடியிருப்புகளுக்கான குடிநீர் வசதியினையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment