மூன்று வாகனங்கள் மோதியதில் மூவர் படுகாயம்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் அறுவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கண்டி, பேராதெனிய ரியகம பிரதேசத்தில் இன்று காலை நடந்துள்ளது.

பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி வீதியில் சென்று கொண்டிருந்த ஏனைய இரண்டு வாகனங்களுடன் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள்  கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாரவூர்தியின் சாரதிக்கு வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் குறித்த விபத்து இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார்  விசாரணைகளை முனெ்னெடுத்து வருகின்றனர்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment