கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடத்தப்பட்ட ஆடைக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் .க் கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி கோரக்கன்கட்டு பொது நோக்கு மண்டபத்தில், கண்டாவளைப் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.விமலராணி தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கண்டாவளை பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ம.பிரதீப், கிளிநொச்சி மாவட்ட முன்னாள் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சுனேத்திரா சுதாகர், பயிற்சி பெற்ற பெண்கள் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment