பாணா காத்தாடியில் அறிமுகமானவர் சமந்தா, குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையானார். மேல்தட்டு நடிகர்களுட னும் நடித்து தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் கலைச் சேவையைத் தொடர்ந்து வரும் சமந்தாவிற்கு அதன்பிறகு வெளியான ரங்கஸ்தலம், இரும்புத்திரை, மகாநதி போன்ற படங்களும் அடுத்தடுத்து ஹிட் கொடுத்தன.
தற்போது மஜிலி, ஓ பேபி சக்ககுன்னவே ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் மார்ச் 29 ஆம் திகதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் விஜயசேதுபதி, பகத்பாசிலுடன் இணைந்து வேம்பு என்ற ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சமந்தா.
0 comments:
Post a Comment