பாக். ஜெட் விமானங்களை விரட்டியத்தது இந்தியா

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் 3 ஜெட் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டியத்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பழிக்கு பழி தீர்க்க இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள், புகுந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.  

இந்திய விமானப்படையின் துல்லியமான தாக்குதலுக்கு பெயர் பெற்ற 
‘மிராஜ்-2000’ ரக போர் விமானங்கள் 12, சக்திவாய்ந்ததும், ஆயிரம் பவுண்ட் எடையுடையதுமான லேசர் குண்டுகளை சுமந்தவாறு நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்கு பறந்தன.

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம், தளம் அமைந்துள்ள பாலகோட், முசாபராபாத், சகோதி ஆகிய இடங்களில் குண்டுமழை பொழிந்தன. 

பயங்கரவாத முகாம்கள் மற்றும், தளத்தையும்  நிர்மூலமாக்கி விட்டு
வெற்றிகரமாக இந்திய போர் விமானங்கள், வந்து சேர்ந்தன.

இந்தத் தாக்குதலில், அந்த முகாம்களில் தூங்கிக் கொண்டிருந்த பயங்கரவாதிகள் சுமார் 350 பேர் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், எல்லையில்  இந்திய விமானப்படை தயார் நிலையில் இருக்கும்படி பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புக்கான அமைச்சரவையுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். 

எல்லைப் பகுதியில் உள்ள, இந்திய வான் தடுப்பு அமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு, இந்திய விமானப்படை அறிவுறுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் விமானப்படை எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதால், காஷ்மீர், பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களை ஒட்டி அமைந்திருக்கும் எல்லைப்பகுதியிலும், இவற்றின் அண்டை மாநில பகுதிகளிலும், இந்திய பாதுகாப்புப்படைகளின் வான் தடுப்பு அமைப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்று காலை  பாகிஸ்தானின் 3 ஜெட் விமானங்கள்  ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராஜவுரி மாவட்டம் நவ்சார பகுதிக்குள் ஊடுருவியது.

இந்திய விமானங்கள் அதனை விரட்டியத்து ஜெட் ஏவுகணைகளை மறித்ததால் பாகிஸ்தான் ஜெட் விமானங்கள் திரும்பி விட்டன. 

பாகிஸ்தான்  எப்16 ரக போர் விமானங்கள்  மூன்று ஆரம்ப நவ்சாராவுக்குள்  புகுந்ததாக முதல் கட்ட அறிக்கைகள் தெரிவிகின்றன.

பாதுகாப்புக்காக   ஜம்மு, பதான் கோட், லே, ஸ்ரீநகர் விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கபட்டு உள்ளது. மேலும் வான் பகுதியில்  பயணிகள் விமானம் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானங்கள் குண்டுவீசியதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கின்றன.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment