தமிழ் சினிமாவில் 2018 ஆம் ஆண்டின் வெற்றிப் படங்களில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்த படம் 'ராட்சசன்'.
'முண்டாசுப்பட்டி' படத்தை இயக்கிய ராம்குமார், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இப் படத்தை இயக்கி உள்ளார்.
ஒரு பரபரப்பான த்ரில்லர் படமாக அமைந்த படத்திற்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய நல்ல விலை கொடுத்து வாங்கினார்கள்.
தெலுங்கில் ரீமேக்காக உள்ள 'ராட்சசன்' படத்தில் பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் மகன், பெல்லம்கொண்டா சீனிவாஸ் நாயகனாக நடிக்கிறார்.
படத்தை 'ரைடு' படத்தை இயக்கிய ரமேஷ் வர்மா இயக்குகிறார். படப்பிடிப்பை 75 நாட்களில் முடித்துவிட திட்டமிட்டுள்ளார்களாம்.
தமிழில் இசையமைத்த ஜிப்ரான் தான் தெலுங்கிலும் இசையமைக்கிறார். நாயகி யார் என்பதை இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார்கள். முன்னணி கதாநாயகி ஒருவர்தான் நடிப்பார் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment