மைத்ரி - மகிந்த இணைந்த அரசே எதிர்காலத்தில் அமைக்கப்படும். இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொது செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருணாகல், கடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டணி, சில கட்சிகளுக்கு பாதிப்பையும், சில கட்சிகளுக்கு நன்மையையும் ஏற்படுத்தும்.
எனினும் மைத்திரி - மகிந்த கூட்டணியைத் தவிர்ந்து வேறு ஒரு கூட்டணி அமைக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment