பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு கிடைக்காவிட்டால், அடுத்த வாரம்முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் ஒன்றிணைந்த குழு தீர்மானித்துள்ளது.
சட்டத்துறை அதிகாரிகளுக்கு மாத்திரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராகவே அரச நிறைவேற்று அதிகாரிகள் நேற்று அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.
இந்த ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அன்றாட செயல்பாடுகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டதாக அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத் தலைவர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை சங்கம், தேசிய இறைவரி தொழிற்சங்க ஒன்றியம், அகில இலங்கை ஆசிரியர் கல்வி சேவை சங்கம் உள்ளிட்ட 15 நிறைவேற்று அதிகாரிகளின் சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment