வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ வி விக்னேஷ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு எதிர்வரும் மே மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
23 ஆம் திகதி மற்றும் 31 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதவான் மஹிந்த சமயவர்தன இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ வி விக்னேஷ்வரனுக்க எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment