அரசாங்கத்தினால் விவசாயிகளின் நலன்கருதி வழங்கப்பட்ட காணிகளுக்கு உறுதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டமூலம் ஒன்றை எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது சமர்ப்பித்து ஒப்புதலை பெற்றுக் கொள்ள எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குருணாகலை பொலிஸ் பயிற்சி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ் வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
0 comments:
Post a Comment