முதலில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் தினம் மற்றும் குற்றவாளி சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிக விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் தினம் அறிவிக்கப்படும் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வியாபாரிகளுக்கு அந்த தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார்.
அத்துடன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் பட்டியலையும் ஜனாதிபதி பெற்றுக் கொண்டார்.
0 comments:
Post a Comment