யாழ்ப்பாணம் வரணி இயற்றாலைப் பகுதியில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட இருவரை இளைஞர்கள் அதிரடியாக சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது.
வீட்டுக்குள் புகுந்த மூவரில் இருவரே அகப்பட்டனர். தப்பியோடிவர்கள் நகைகள் மற்றும் பணத்துடன் தலைமறைவாகினர்.
“வாள், கத்தி, பொல்லுகளுடன் புகுந்த மூவரும் தூக்கத்திலிருந்த நபரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, குடும்பத் தலைவியையும் தாக்கி விட்டு, சுமார் ஒரு மணி நேர சோதனையின் பின்னர், நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளனர்.
குறித்த திருடர்கள் வீட்டில் இருந்த வெளிநாட்டு மதுபானத்தைக் கண்டதும் அதனை உடைத்து குடித்ததுடன், கஞ்சாவும் புகைத்து தப்பிச் சென்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை அறித்த அப்பகுதி இளைஞர்கள் அதிரடியாக வீட்டைச் சுற்றி வளைத்து இருவரை மடக்கிப் பிடித்தனர்.
இருவரும் நாவற்குழியைச் சேர்ந்தவர்கள் எனவும், தப்பியோடிவர் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
திருடர்களின் தாக்குதலில் காயமடைந்த குடும்பத்தலைவி சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment