திரையுலகினர் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கும் விருதுகளில் ஒன்று தான் ஆசியா விஷன் விருது.
2019 க்கான ஆசியா விஷன் விருது வழங்கும் விழா துபாயில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுசுக்கு வழங்கப்பட்டது.
வடசென்னை மற்றும் தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆப் பக்கீர் என இரண்டு படங்களிலும் இவரது சிறந்த நடிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது
சிறந்த நடிகைக்கான விருது த்ரிஷாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் தனுஷ், த்ரிஷா, விஜய்சேதுபதி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், டொவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment