மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டுக் கட்சி எதிர்காலத்தில் தாங்களே ஆட்சியமைக்கப் போவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்று தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை வழங்குவோம் எனவும் கூறுகின்றனர்.
உண்மையில் இவர்கள் நினைத்திருந்தால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம்.
ஏனென்றால் யுத்தத்தை நடத்தியவர் மகிந்த ராஜபக்ஷவே. அவரோடு இணைந்து செயற்பட்டவர்கள் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களே. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக மார்தட்டிக்கொண்ட இவர்கள் நினைத்திருந்தால் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான தீர்வினை வழங்கி தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்த்திருக்கலாம். உண்மையில் இங்கு நடந்த யுத்தத்தை மற்றொரு நாட்டின் மீது தனது படையை அனுப்பி மேற்கொள்ளப்பட்ட ஒரு போராகவே மஹிந்த கருதினார்.
0 comments:
Post a Comment