யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் ஆயுத களஞ்சியம் இருப்பதாகக் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து அங்கு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செம்பியன்பற்று தெற்கு கிராம சேவகர் பிரிவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
நீதிமன்றின் அனுமதியுடன், கிளிநொச்சி பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் கனரக வாகனம மூலம் அகழ்வு பணிகள் மேற்கொண்டு வரகின்றனர்.
அகழ்விடத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன், கனிய வளங்கள் மற்றும் புவிச் சரிதவியல் திணைக்கள வெளிக்கள உத்தியோகத்தர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், வன வள திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
0 comments:
Post a Comment