திம்புள்ள பத்தனை ஹற்றன் - நுவரெலிய பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கொட்டகலையிலிருந்து ஹற்றன் பகுதியை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும் ஹற்றனிலிருந்து கொட்டகலை நோக்கி வந்த பேருந்தும் மோதியதில் விபத்து நடந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி கொட்டகலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே விபத்து நேர்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment