இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மற்றும் கெப் ரக வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெகிராவை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரொருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஹபரணை - அனுராதபுரம் வீதியின் யகானுகஸ்வெவ பிரசேத்தில் நேற்று இரவு இந்த விபத்துச் சம்பவம் நடந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து மொனகலை நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து கெப் ரக வாகனமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த கெப் ரக வாகனத்தில் பயணித்த 5 பேரும் ஹபரணை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
0 comments:
Post a Comment