புத்தளம் - நவகத்தேககம - வெல்லேவ - வெலிஅஹாரே பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எண்மர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நவகத்தேகம பிரதேச சபையின் இரு உறுப்பினர்கள் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீடு ஒன்றில் இவ்வாறு இந்த சூதாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைபில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment