சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அடுத்தாண்டு வெளியே வர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் திகதி சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்னும் சில தினங்களில் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ள நிலையில், 2021ம் ஆண்டுக்கு பதிலாக 2020ம் ஆண்டே விடுதலையாக வாய்ப்பிருக்கிறது.
அதாவது சிறை விதிகளின் படி, நீண்ட கால மற்றும் குறுகிய கால பெற்ற கைதிகளை நன்னடத்தையை காரணம் காட்டி தண்டனை காலத்தில் நான்கில் மூன்று பங்கு பூர்த்தி செய்து விட்டாலே அவர்களை விடுவிக்கலாம்.
இதன்படி முன்கூட்டியே அவர் விடுதலை செய்யப்பட்டாலும், ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவும் இதுவரையிலும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
வழக்கை நடத்திய கர்நாடகா அரசு தான், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் வருவாய் துறைக்கு உத்தரவிட்டு சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதவிர அமலாக்க துறைக்கும் சட்டவிரோத சொத்துக்களை முடக்க அதிகாரம் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment