உந்துருளியில் கஞ்சா கொண்டு சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஊர்காவற்துறை பகுதியில் வைத்து நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து இரண்டு கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
கடற்படைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, ஊர்காவற்துறை - புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.
கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட உந்துருளி மேலதிக விசாரணைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment