கால்நடை பண்ணை ஒன்றிலிருந்து எருமை மாடுகளை களவாடிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தனமல்வில - எதகோண உணகந்த பகுதியில் வைத்தே 17 எருமை மாடுகளுடன் இவர்கள் கைதாகினர்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைய அவர்கள் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதே பகுதியை சேர்ந்த 26 மற்றும் 27 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment